என் ஆசை உனக்குள்ளே இருக்காதா – 2
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க என் வாழ்க்கைல நடந்த உண்மையா ஒரு சம்பவத்தை உங்க கிட்ட சொல்றேன் வாழ்க்கைல நல்ல உண்மையான நண்பன் வேணும்னு நெனைக்கிறவங்க உங்க சந்தோஷத்தையும் கஷ்டங்களையும் பகிர்ந்திக்கணும்னு நெனைக்கிறவங்க இந்த கதையை புடிச்சவங்களும் எனக்கு இந்த [email protected] ID க்கு மெசேஜ் பண்ணுங்க வாங்க என் வாழ்க்கைல நடந்த உண்மையான நிகழ்வு பாகம் 2க்கு போகலாம்.
இப்படியே ஒரு ஒரு நாளும் அவங்கல பாத்து சும்மா சாதாரணமா பேச மட்டும் தான் முடிஞ்சிது என்னாலயும் சரியா பேச முடியல அவங்க கூட சரி இப்படியே எத்தனை நாள் போகும்னு பாக்கலாம்னு அப்படியே கொஞ்ச நாள் போயிட்டு இருந்துச்சு அப்பப்ப சாப்டீங்களா சரியா நேரத்துக்கு சாபிடுங்கனு மட்டும் பேசிட்டு இருந்தோம் தனியா இருக்கும் போது அவங்க கூட இப்படி பேசிடலாம் அப்படி பேசிடலாம்னு மட்டும் யோசிப்பேன் ஆனா அவங்கள பாத்ததும் சுத்தமா பேச்சே வராது அந்த மாதிரி ஆகிடுறேன் ஒரு நாள் எங்க இருந்துச்சு தைரியம் வந்துச்சுனு தெரில ஏதோ ஒரு நெனப்புல அவங்களுக்கு மெசேஜ் பண்ணேன் என்ன பண்றீங்கனு அவங்க மெசேஜ் பாத்துட்டாங்க ஆனா எதுவும் பதில் அனுப்பல அச்சோ போச்சு ஏதோ இருந்த நல்ல பேரும் போச்சா அவசரப்பட்டுட்டியே குமாருன்னு தோணுச்சு அடுத்த நாள் அவன் ஆபீஸ் போகும் போது அவங்கள பாத்தேன் அப்போ கேட்டேன் என்னங்க நேத்து மெசேஜ் பண்ணேன் பாத்துட்டு எதுவும் மெசேஜ் பண்ணவே இல்லனு கேட்டேன் இல்ல சார் எனக்கு மெசேஜ் பண்றது இதெல்லாம் புடிக்காது வீட்டுக்கு போனா போன் யூஸ் பண்ண மாட்டேன் அது ஏதோ போன் பேசிட்டு பாத்தது எனக்கு மெசேஜ் பண்ணனும்னு தோணலனு சொல்லிட்டாங்க எனக்கு என்ன டா இது இப்படி சொதப்பிடுச்சுனு தோணுச்சு சரி இதுக்கு மேல என்ன பண்றது நமக்கு மட்டும் ஆச இருந்தா போதுமா தூக்கி போட்டு வேலைய பாப்போம்னு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தேன்
இப்படியே ஒரு ரெண்டு வாரம் போய்டுச்சு அதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் போனதுக்கு அப்பறம் சாயங்கால நேரம் நான் சும்மா வண்டில சுத்திட்டு இருந்தேன் அப்போனு பாத்து திடீர்னு மழை வர நான் எங்கயாவது நிக்கலாம்னு பாத்தா ஒரு இடமும் இல்ல அப்பறம் ஒரு இடத்துல வண்டி நிறுத்தி அங்க மழைல லேசா நனஞ்சுட்டே நின்னுட்டு இருந்தேன் என் பக்கத்தில ஒரு நாலு பேர் தள்ளி ஒரு பொண்ணோட கை மட்டும் சொட்டுற மழை தண்ணில விளையாட அத பாக்க ரொம்ப ஆசையா இருந்துச்சு யாரு அதுனு மெதுவா எட்டி பாத்தேன் பாத்தா அது யாரா இருக்கும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா ஆமா என் ஆசை தேவதை தான் அவ உதட்டோரம் சிரிப்போட அந்த மழை தண்ணில அவ கை வச்சு விளையாடிட்டு இருக்க அவ விளையாட்ட ரசிச்சுட்டே இருந்தேன் கொஞ்ச நேரத்துல மழை லேசா தூரிட்டு இருந்துச்சு அப்போ அவங்க அங்க இருந்து வெளிய வந்தாங்க அவங்க அப்போ வெல்ல கலர் சுடிதார் போட்ருந்தாங்க பாக்க அவ்ளோ அழகா அப்படி ஒரு அழகான முக பாவனையோட செம்மயா இருந்தாங்க பொதுவா பொண்ணுங்க எப்பயும் வெல்ல கலர்ல சேலை கட்டிருந்தாலும் சரி சுடிதார் போட்ருந்தாலும் சரி அது பொண்ணுங்களுக்கு தனி அழகு தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.
அவங்க வெளிய ரோடுல கால் எடுத்து வைக்கும் போது ரோட்ல போயிட்டு இருந்த கார் ஒன்னு வேகமா வந்து அவங்க மேல சேர பளிச்சுனு தெறிச்சு விட்டுட்டு போனான் அவங்க பக்கத்துலயே பின்னாடி நின்னுட்டு இருந்ததால என் மேலயும் பட்டுச்சு எங்க ரெண்டு பேரோட டிரஸ் மேலயும் மூஞ்சிலயும் முழுக்க சேரா ஆகிடுச்சு அவங்க ஐயோ அட ச்சனு திரும்பி பாக்க அங்க நானும் என் கை கால் உதறி ஐயோன்னு சொல்லிட்டு இருக்க அவங்க என்ன பாத்து மொறச்சுட்டே என்ன பின்தொடருறீங்களானு கேக்க உடனே நான் ஏங்க அந்த ஆபீஸ்ல நீங்க வேல பாக்றீங்க அங்க உங்கள ஏதாவது பண்ணா கேக்கலாம் ஒட்டு மொத்த சென்னையையும் வெலைக்கு வாங்கிட்டிங்களா என்ன மழை பெஞ்சுது ஓரமா நின்னேன்னு சொல்ல அவங்க அமைதியா அங்க இருந்து கிளம்ப பாக்க அப்போ மழை மறுபடியும் அதிகம் ஆக மறுபடியும் ரெண்டு பேரும் ஓரமா நின்னோம் பக்கத்தில கொஞ்சம் இடைவெளி விட்டு தான் நான் நின்னுட்டு இருந்தேன் அப்போ அவங்க போன் அடிச்சுது போன் எடுத்து ஹலோ சொல்லுங்க மாமான்னு அவங்க சொல்ல ம்ம் ம்ம் னு பேசிட்டு இருந்தாங்க நான் உடனே சரி தான் அவன் புருஷனா தான் இருக்கும் எனக்குன்னு எங்க போனாலும் வில்லனுங்க வந்துடுவானுங்களேன்னு வாய் விட்டு மொனங்கிட்டு இருக்க அது அவங்களுக்கும் கேட்டுடுச்சு போல அவங்க திரும்பி பாத்து என்ன முறைக்க ஐயோனு நெனச்சு அந்த பக்கம் திரும்பிட்டேன் அவங்க பேசி முடிச்சுட்டு போன் அவங்க பாக்ல வச்சுட்டு என்ன கூப்பிட்டாங்க ஹலோ உடனே நான் திரும்பி யம்மா தாயே நான் தெரியாம சொல்லிட்டேன் நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது என் வாய வாட்டர் வாஷுக்கு தான் விடணும்னு சொல்லி அவங்கள கும்புட்டு சொல்ல உடனே அவங்க கண்ண கோவமா வச்சிருந்தாலும் அவங்க நான் சொன்னதை கேட்டு அவங்க சிரிப்பை கூட வெளிய காட்டிக்காம அவங்க உதட்டை கடிச்சு உள்ளுக்குள்ளேயே சிரிச்சிக்குட்டாங்க.
யப்பா இப்பயாவது அவங்க முகத்துல லேசானாலும் அந்த கொஞ்சம் சிரிப்பாவது பாக்க முடிஞ்சிதேனு தோணுச்சு. அப்பறம் மறுபடியும் மழை கொஞ்சம் விட்டுச்சு அப்போ அவங்க கெளம்புனாங்க ஒரு அடி எடுத்து வச்சவங்க என்ன திரும்பி பாத்தாங்க நான் உங்க பின்னாடி வர மாட்டங்க நம்புங்க தைரியமா போங்கன்னு சொல்ல அவங்க திரும்பி அடுத்து ரெண்டு அடி எடுத்து வச்சு நடக்க உடனே நான் ஒரு நிமிஷம்ங்கனு சொல்ல அவங்க திரும்பி என்ன பாத்து என்னனு மாதிரி அவங்க கண் புருவத்தை தூக்கி கேட்டாங்க அது ஒரு வித திமிர் பார்வையா இருந்தாலும் அது அந்த பெண்மைக்கு உண்டான அழகு திமிரா தான் எனக்கு தெரிஞ்சிது இல்ல மழை வேற விட்டு விட்டு பெஞ்சுட்டு இருக்கு உங்க மேல வேற ரொம்ப சேரா இருக்கு இப்படியே எப்படி பஸ்ல போவீங்க எப்படியும் நான் உங்க வீட்டு ஏரியா தாண்டி தான் போக போறேன் உங்களுக்கு சரினா என் கூட வண்டில வரலாம் என்ன நீங்க நம்புனா மட்டும்னு சொல்ல அவங்க என்ன மொறச்சுட்டே யோசிச்சாங்க சரி கூட வேல செய்றவன்னு ஏன் நெனைக்கிறீங்க ஒரு பைக் டாக்ஸி ஓட்டறவன்னு நெனச்சுக்கோங்களேன்னு சொல்ல அவங்களும் சரினு பதில் சொல்லாம சரினு தலையை மட்டும் ஆட்டுனாங்க. முதல் முறையா அவங்க கூட வண்டில போக போறேன் இப்ப நான் நடந்துகிற விதமும் அவங்க கூட பேசுற பேச்சும் தான் அவங்க அடுத்த தடவ என் கூட வர ஆசைப்பட வைக்குறதுல இருக்குனு நெனச்சு வண்டில ஏறி உக்காந்து ஏறுங்கனு சொல்ல அவங்க என் தோல் மேல கை படாம வண்டி சைடு கம்பி புடிச்சு ஏறி என் பின்னாடி அவங்க உடம்பு என் மேல கொஞ்சம் கூட படாத மாதிரி உக்காந்தாங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுல இன்னொரு ஆளே உக்காரலாம் அந்த அளவுக்கு இடம் இருந்துச்சு ம்ம்ம் நல்லா உஷாரா தான் இருக்காங்கனு நெனச்சு வண்டி எடுத்தேன்.
பைக் கண்ணாடி அட்ஜஸ்ட் பண்ணி அவங்க முகம் எனக்கு தெரியுற மாதிரி வச்சேன் வண்டில போகும் போது அவங்க மழைல நெனஞ்ச அவங்க அழகான பளிச்சுனு வெளிச்சம் அடிக்கிற அவங்க முகத்தை தான் பாத்துட்டே வண்டி ஓட்டுனேன் அப்போ சைடுல ஒரு கோவில் வர அவங்க கை விறல் வச்சு அவங்க உதட்டுல தொட்டு கும்புட்டாங்க கோவில்ல நிறுத்தட்டா சாமி கும்புட்டு வாரீங்களானு கேக்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க போங்கன்னு சொல்ல சரினு நான் அவங்க கோவத்தை நெனச்சு சிரிச்சிட்டே வண்டி ஒட்டிட்டே இருந்தேன் ஒரு அழகான பொண்ணு நம்ம மேல கோவப்பட்டு பேசுனா கூட அதுவும் நமக்கு சந்தோசமா தான இருக்கும் அப்படி தான் இருந்துச்சு எனக்கு அடுத்து கொஞ்ச தூரம் போனதும் ஒரு சர்ச் வந்துச்சு அத பாத்ததும் அவங்க சிலுவை போட்டு கும்புட ஆரமிச்சாங்க அடடா என்ன பொண்ணுடானு மனசுல மின்னல் அடிக்க சூப்பருங்க எல்லா சாமியும் புடிக்குமா உங்களுக்குனு கேக்க எல்லா சாமியும் ஒன்னு தான் நம்ம கும்புடறது தான் வேற வேற ஆனா நெனைக்கிறது எல்லா சாமியும் ஒன்னு தான்னு சொல்ல அடேங்கப்பா உண்மையாவே நீங்க ரொம்ப கிரேட்ங்கனு சொல்லி அவங்கள கண்ணாடி வழியா பாக்க அவங்க லேசா சிரிச்சிட்டே வந்தாங்க அப்பாடா ஏதோ ஓரளவுக்காவது நம்மளால ஸ்கோர் பண்ண முடிஞ்சிதேனு கொஞ்சம் சந்தோசமா இருந்துச்சு அப்படியே கொஞ்ச தூரம் போக அவங்க ஏரியா வந்துச்சு ஏங்க இதுக்கு அப்பறம் எப்படி போனும்னு கேக்க இதுக்கு மேல நீங்க வர வேணாம் நானே பொய்க்குறேன் ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி என் கைல அம்பது ரூபா கொடுத்தாங்க என்னங்க இதுனு கேக்க நீங்க தான சொன்னீங்க பைக் டாக்ஸினு நெனச்சுக்கோங்கன்னு அதான் இந்தாங்கனு சொல்லி என் கைல காசு கொடுத்துட்டு நடந்து போய்ட்டாங்க அடங்கொய்யா என்னடா இது கடைசில நம்மள இப்படி ஆக்கிட்டாலே பால் தக தகன்னு கொதிக்க மட்டும் செய்யுது ஆனா போங்க மாட்டேங்குதே அதாவது சுத்தமா இவளுக்கு நம்ம மேல பாசமே வராது போலயேன்னு அவ கொடுத்த காச பாத்துட்டே அங்கேயே நின்னுட்டு இருந்துட்டு அப்பறம் கிளம்பும் போது மழை பெய்ய ஆரமிக்க இவளை நம்மளால புரிஞ்சிக்கவே முடியலையேனு யோசிச்சிட்டே மழை மேல பெய்யுதுனு சொரணை கூட இல்லாம னேநஞ்சுட்டே வீடு வந்து செந்தேன்.
அடுத்து என்ன நடந்துச்சு நான் என்னலாம் பண்ணேன்னு அடுத்த பார்ட்ல சொல்றேன் கண்டிப்பா உங்க எல்லாரோட சப்போர்ட் இருந்தா நான் இன்னும் என்னோட காதலை சுவாரஸ்யமா சொல்ல வசதியா இருக்கும் இல்ல ரொம்ப கடுப்பா இருக்கு ரொம்ப போர் அடிச்சாலும் சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடலாம் [email protected] IDக்கு மெசேஜ் பண்ணுங்க
உங்க மெசேஜ்க்கு காத்திருப்பேன்.
9262000cookie-checkஎன் ஆசை உனக்குள்ளே இருக்காதா – 2